ஓவராக யோசிப்பவரா நீங்க... இது உங்களுக்குத்தான் !

ஒன்றை செய்வதற்கு முன் யோசிப்பது புத்திசாலித்தனமானது தான். ஆனால், ஒன்றை பற்றி அதிகம் சிந்திப்பது, இப்படி நடந்தால் என்னாகுமோ என எதிர்மறையாக சிந்திப்பது பயத்தைத் தரும்.

இது நமது இன்செக்யூரிட்டி, நம்பிக்கையின்மையை தூண்டி நமது நல்ல யோசனைகள் மற்றும் திட்டங்களை நாசமாக்கிவிடும். எனவே, இதை எப்படி நிறுத்துவது என்பதை பார்ப்போம்...

ஒன்றை திறம்பட செயல்படுத்த முடியாத குழப்பமான நேரங்களில் மனதில் பல எண்ணங்கள் பறக்கும். அவை அடங்க நேரம் ஒதுக்கினால் நேர்மறையான திட்டங்கள், யோசனைகளை உருவாக்க முடியும்.

தியானம் அல்லது அமைதிக்கான இசை போன்றவற்றில் மனதை திருப்பினால், இது நேர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பொதுவாக நடைபயிற்சி நல்லது. மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை அழிக்க இது ஒரு வழி என்பது மருத்துவர்களின் அட்வைஸ்.

உதவி தேவைப்படும் ஒருவரிடம் ஓடிச் சென்று நிற்பது நம் கவனத்தை திசைத்திருப்ப சிறந்த வழி. வேறொருவர் மீது கவனம் செலுத்தும்போது சொந்த பிரச்னையை சிந்திக்க நேரமிருக்காது.

ஒன்றை பற்றியே அதிகம் சிந்திப்பது மிகுந்த கவலையை தரும். இது இதய படபடப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்போது ஆழ்ந்து சுவாசித்தால் மன அழுத்தம் நீங்கி அமைதி கிடைக்கும்.

வாழ்க்கையில் உங்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் அனைத்து நேர்மறையான விஷயங்களை எண்ணிப் பாருங்கள். நல்ல நண்பர்கள், குடும்பம், வேலை கிடைத்திருந்தால் அதை எண்ணி மகிழுங்கள்.

இப்படி செய்திருக்கலாமே, அப்படி செய்திருக்கலாமே என யோசிக்க வேண்டாம். எதையும் கடந்து செல்லுங்கள். உங்களை யாரேனும் காயப்படுத்தி இருந்தால் அவர்களையும் மன்னித்து மறந்துவிடுங்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.