திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவில்... ஒன்டே டிரிப் போயி அசத்தலாம் !
உடுமலைப்பேட்டை, திருமூர்த்திமலையில் அமைந்துள்ள இது ஒரு குடைவரைக் கோயிலாகும்.
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். கைலாய காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால், இத்தலம் தென் கைலாயம் என சிறப்பு பெற்றுள்ளது.
இங்கு பாறையை குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர். மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது.
இது ஆன்மிகம் மற்றுமின்றி சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. மலைமேல், 960 அடி உயரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
மலையில் சிறிது தூரம் டிரெக்கிங் சென்றால், அங்குள்ள பஞ்சலிங்க அருவியில் கொட்டும் தண்ணீர் சில்லென வரவேற்கும்.
அதேவேளையில், அவ்வப்போது காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம் என ஒரு நாள் டிரிப்பில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து, விதவிதமாக செல்பி எடுக்கலாம்.