விலங்குகளுக்கு வழி விடுவோம்: இன்று உலக விலங்குகள் தினம்
விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் 'பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம், 1931ல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.
விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை.
ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு தகவமைப்பும், இயல்பும் உண்டு. அவை அவற்றின் கால சூழ்நிலை மாற்றங்கள், இயற்கை நிகழ்வுகள் அனைத்திற்கும் உதவிபுரிகின்றன.
விலங்கினங்களை அழித்து விட்டால் காட்டிற்கு மதிப்பிருக்காது. காடு போய் விட்டால் நீராதாரம் இருக்காது. நீர் இல்லையென்றால் உயிர்களே இருக்காது.
இப்போதைய காலகட்டத்தில் விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும். விலங்குகள் தங்களை தாங்களே பார்த்து கொள்ளும்.
விலங்குகள் மீது அன்பு பாராட்டுவோம். அதுவே நம் இயற்கை சமநிலைக்கு நாம் செய்யும் ஒரே வழி.