சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் நெய் மாய்ஸ்சரைசர்!

நெய்யில் வைட்டமின் 'ஏ','டி' மற்றும் 'ஈ' ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். அதிலும் வைட்டமின் 'ஏ' கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும்.

நெய் கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி பற்றிப் பார்க்கலாம்.

ஒரு பெரிய சமமான தட்டு எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு குழி கரண்டி நெய் எடுத்துக்கொள்ளவும். இதில் 3 டீஸ்பூண் அளவு தண்ணீர் சேர்த்து தேய்க்க வேண்டும்.

இதில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை அகற்றவும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து இந்த முறையை நூறு தடவை செய்ய வேண்டும். செம்பு பாத்திரம் மிகவும் நல்லது. அது ஒரு பாரம்பரிய முறையும் கூட.

நேரம் அதிகம் பிடிக்கும் என்றால் இதை மிக்ஸியில் செய்யலாம். நெய் ஊற்றி 7,8 முறை தண்ணீர் சேர்த்து சுற்றும் போதே நெய்யானது மாய்ஸ்சரைசர் பததிற்கு வந்துவிடும்.

இது வறண்ட சருமத்துக்கு சிறந்தது. குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போல அப்ளை செய்யவும்.

மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைத்து, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இதனால் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படாது.