இந்தியாவில் சாகசப் பிரியர்களுக்கான டாப் பங்கி ஜம்பிங் இடங்கள் !

உத்தரகாண்டில், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ், பங்கி ஜம்பிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கான ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது. பசுமையான சூழல், கங்கை நதி என மெய்சிலிர்க்க வைக்கும்.

கோவாவின் அஞ்சுனா கடற்கரையின் பின்னணியில் பங்கி ஜம்பிங் செய்வது சாகசப்பிரியர்களுக்கு தனித்துவமான இடமாக மாற்றுகிறது.

பெங்களூரு, கர்நாடகா... இது இந்தியாவின் மிக உயரமான பங்கி ஜம்பிங் தளங்களில் ஒன்றாகும்.

லோனாவாலா, மகாராஷ்டிரா... இங்கு 50 மீட்டர் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய காட்சிகளை ரசிப்பது சிலிர்ப்பான அனுபவத்தை தரக்கூடும்.

டேராடூன், உத்தரகண்ட்... பங்கி ஜம்பிங் பிரியர்கள் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியை இங்கு அனுபவிக்கலாம். கம்பீரமான பள்ளத்தாக்குகளின் அழகை வெகுவாக ரசிக்கலாம்.

பங்கி ஜம்பிங் செய்வது சாகச பிரியர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், தரமான உபகரணங்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது.