அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை ஆளப்போகும் 2 லட்சம் ரோபோக்கள்.
உலகின் பல நவீன பெருநகரங்கள் பலவற்றில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோக்களைப் பயன்படுத்த பல நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.
மத்திய தரைக்கடல் நாடான துபாயில் அடுத்த 10 ஆண்டுகளில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொள்முதல் உற்பத்தி 9 சதவீதம் வரை அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளது.
தற்போது துபாய் ரோபோடிக்ஸ் மற்றும் ஆடோமேஷன் திட்டம் அந்நாட்டு இளவரசர் ஷேக் ஹம்டன் பின் முகமது பின் ரஷித் அல் மாக்டோம்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் லாஜிஸ்டிக்ஸ், மருத்துவத் துறை, பொது சேவை, வங்கி உள்ளிட்ட துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோபோக்கள், துபாய் ஃப்யூச்சர் லேப்ஸ் ரோபோ தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் அரசு ரோபோ தயாரிப்புக்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
துபாய் சிலிக்கான் ஒயாஸிஸ் பகுதியில் விரைவில் 'ரோபோ டே' விழா நடத்தப்பட உள்ளது.