இந்தியாவில் ஐரோப்பிய சூழலை தரும் இடங்கள் சில !
அரண்மணை, ஏரிகள் மற்றும் படகு சவாரி என சிலிர்ப்பான அனுபவங்களை தரும் உதய்பூர், வெனிஸில் இருப்பது போன்ற போன்ற உணர்வை தரக்கூடும்.
மூணாறு... இங்குள்ள தேயிலை தோட்டங்கள், மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் குளிர்ந்த சூழல் போன்றவை சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளின் உணர்வை தூண்டுகின்றன.
கூர்க்... காபி தோட்டங்கள், மலைகள் மற்றும் இங்குள்ள தங்கும் விடுதிகள் ஆகியவை, ஐரோப்பிய கிராமத்தை போன்ற உணர்வை தருகிறது.
அழகிய மலைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான ஏரிகளுடன் கூடிய ஷில்லாங், ஸ்காட்லாந்தின் சிறிய பதிப்பாக உள்ளது.
புதுச்சேரி... பிரெஞ்சு காலனித்துவ கட்டடக்கலை, கஃபேகள் மற்றும் அழகிய கடற்கரைகளுடன் கூடிய புதுச்சேரி, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பிரான்ஸின் ஒரு பகுதியாக உள்ளது.
தவுலதர் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள தர்மசாலா, இதன் திபெத்திய கலாசாராம், கஃபேகள் மற்றும் இனிமையான சூழலால் தனித்துவமான ஐரோப்பிய அழகுடன் திகழ்கிறது.
நைனிடால்... அழகிய ஏரி மற்றும் மலைகளுடன் சுவிஸ் நகரம் போல் உள்ளது. இங்குள்ள பழைய கட்டடங்கள் மற்றும் படகுசவாரிகள் வசீகரத்தை கூட்டுகின்றன.
மலைகள், குளிர்ந்த சூழல் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளை கொண்ட லோனாவாலா, ஐரோப்பிய கிராமங்களை ஒத்துள்ளது.
ரிஷிகேஷ்... ஆன்மீக தலங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும், சாகச விளையாட்டுகளும், இங்கு பாயும் கங்கை நதியும், ஐரோப்பிய நகரில் இருப்பதைப் போன்ற உணர்வை தரக்கூடும்.
பழங்கால கோவில்கள், சிற்பங்கள் மற்றும் கடற்கரை அழகுடன் நிறைந்த மகாபலிபுரம், மத்திய தரைக்கடல் அழகை அளிக்கிறது.