மனதை கட்டுப்படுத்தி ரிலாக்ஸாக இருக்க சில டிப்ஸ்கள்

மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உடல் மட்டுமின்றி மனதும் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் போதிய தூக்கம் இருப்பது மிகவும் முக்கியமானது.

மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை ஆரோக்கியமாக வைக்க தினவும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அவ்வப்போது இடைவேளை எடுத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடும்போது, எதிர்மறை எண்ணங்களில் இருந்து மனதை திசை திருப்பலாம்.

உங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் எழுத்து வடிவில் ஒரு டைரி அல்லது நோட்டில் பதிவு செய்யும் போது, ரிலாக்ஸாக உணரலாம்.

தேவைப்படும் நேரங்களில் நெருங்கிய நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ மனம் விட்டும் பேச தயங்கக்கூடாது; அடிக்கடி பேசி சுமூகமான உறவை மேம்படுத்தவும்.

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தும் போது, மன அழுத்தத்தை விரட்டியடிக்கலாம்.

சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் மன ஆரோக்கியத்துக்கு அவசியமானது.