கர்நாடகாவிற்கு ரோட் ட்ரிப் செல்கிறீர்களா? இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்!
கர்நாடகாவில் புதுவையும், பழமையும் கலந்த அழகுடன் நீர்வீழ்ச்சிகளும் அலங்கரிக்கின்றன. நீங்கள் சாலை பயணங்கள் மூலமாக சென்றால் இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு மகிழலாம்.
கர்நாடகாவின் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று ஜோக் நீர்வீழ்ச்சி. இது நாட்டிலேயே இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி. சீசன் காலம் - ஆக., முதல் ஜன., வரை.
சிக்மக்ளூருக்கு அருகில் ஹெப்பே நீர்வீழ்ச்சியை அடைய 2 கி.மீ., டிரெக்கிங் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். சீசன் காலம் - அக்., முதல் பிப்., வரை.
வார இறுதி நாட்களில் செல்ல ஏற்ற இடம் இந்த சுஞ்சி நீர்வீழ்ச்சி. இங்கு தண்ணீர் விழும் இடத்தில் நீந்தும் அளவுக்கு குளம் போன்று இருக்கும். சீசன் காலம் - அக்., முதல் பிப்., வரை.
கர்நாடகாவில் உள்ள பிரமிக்க வைக்கும் அருவிகளில் ஒன்று சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி. ஆனால் தொலைவில் இருந்து அருவியின் சாரலை மட்டுமே அனுபவிக்கலாம். சீசன் காலம்: ஜூலை முதல் ஜன., வரை.
பல நீரோடைகளால் உருவாக்கப்பட்ட சதோடி நீர்வீழ்ச்சி, மினி நயாகரா என செல்லமாக அழைக்கப்படுகிறது. சீசன் காலம் - நவ., முதல் ஏப்., வரை.