எந்த பேன்ட்க்கு எந்த பெல்ட்... இதோ டிப்ஸ்...

பே ஷன் உலகில், ஆண்கள் அதிகம் கண்டுகொள்ளாத ஆனால், மிகவும் முக்கியமான ஒரு விஷயம் பெல்ட். அதன் முக்கியதுவம் குறித்து பார்ப்போம்.

அலுவலகம் அல்லது விசேஷங்களுக்கு போகிறீர்கள் என்றால், பார்மல் சட்டை-பேன்ட்டுடன் ஸ்கின்னி பெல்ட், பேப்ரிக் பெல்ட், அல்லது வெப் பெல்ட் போன்றவற்றை முயற்சித்து பாருங்கள்.

இது உங்கள் தோற்றத்துக்கு, ஒரு தனித்துவமான ஸ்டைலைக் கொடுக்கும்.

முக்கியமான நிகழ்வுகளுக்கு, பார்மல் ஷர்ட்- பேன்ட்டுடன், கருப்பு அல்லது டார்க் பிரவுன் நிறங்களில், மெட்டாலிக் பின் பக்கிள் கொண்ட தோல் பெல்ட் அணிந்து பாருங்கள்.

ஜீன்ஸ் அணிபவர்களுக்கு, கேஷுவல் தோல் பெல்ட்தான் பெஸ்ட். இது உங்கள் தோற்றத்துக்கு ஒரு மாடர்ன் டச் கொடுக்கும்.

மார்க்கெட்டில் பின்னல் பெல்ட், இருபுறமும் பயன்படுத்தக்கூடிய ரிவர்சிபிள் பெல்ட், டாட்டிக்கல் பெல்ட் (மிலிட்டரி ஸ்டைல்) போன்ற பல வகையான பெல்ட்கள் வந்துள்ளன.

இவை ஒவ்வொன்றும் உங்கள் உடைக்கு ஏற்ற, ஒரு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கும்.

ஆகவே, அடுத்த முறை பெல்ட் வாங்கும்போது, உங்கள் ஸ்டைலுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து அசத்துங்கள்!