அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஆட்டுத்தோல் தோப்பறை - சுவாரஸ்சிய தகவல்கள் இதோ…

சித்திரை திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கி ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளும் போது நடக்கும் தீர்த்தவாரியில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

கடும் வெயில் நேரத்தில் வைகை ஆற்றிற்கு வரும் அழகரை குளிர்விக்க அவர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுவார்கள். இந்த பழக்கம் பல நூற்றாண்டு காலமாக இருக்கிறது.

அதேபோல் நேர்த்தி கடன் போட்டு விரதம் இருந்து அழகர் வேடமிட்டு வருபவர்கள் மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

தண்ணீரோடு கிருமி நாசினியான மஞ்சள் கலந்து பொதுமக்கள் மீது பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்வாறு தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் அதற்கு ஆடு தோலில் செய்த ஒருவித தோல்பையை பயன்படுத்துகின்றனர். இதற்காக பாரம்பரிய முறையில் தோல் பைகள் தயாரிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள 150 குடும்பத்தினர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தோல் பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்டுத்தோல்களை சுண்ணாம்பு, ஆவாரம்பூ இலை பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நன்கு ஊர வைத்து, பின்பு வெயிலில் காய வைத்து தோலை பதப்படுத்தி இந்த பையை தயார் செய்து வருகின்றனர்.

தோலின் அளவு, தன்மையைப் பொறுத்து அதன் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது.