இன்றைய பரபரப்பான நவநாகரிக காலத்திலும் பாரம்பரிய உடை, அணிகலன்களை அணிவதே தற்போது டிரெண்டிங்.
விழாக்கள், திருமண வைபவம் என அனைத்துக்கும் கைக்கொடுக்கிறது சந்த்பாலி வகை காதணிகள்.
சந்த்பாலி காதணிகள் ஒரு இந்திய பாரம்பரிய காதணிகள். குறிப்பாக ஹைதராபாத்தில் முகலாயர்கள், நிஜாம் காலத்தில் சந்த்பாலி காதணிகள் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
இந்த காதணிகள் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளன. விழாகாலங்களில் அணிவது பலரின் சாய்ஸாக உள்ளது.
பாரம்பரிய உடை மட்டும் அல்லாமல் மாடர்ன் டிரஸ்களுக்கும் இவை மேட்சாவதால் பலராலும் அதிகளவில் விரும்பப்படுகிறது.
விழாக்களுக்கு செல்லும் போது வெறும் காதணி மட்டுமே கிராண்டான லுக்கை தருவதால், கூடுதலாக பிற நகைகளை அணிவது உங்களின் சாய்ஸ் தான்.
இதில் தங்கம், வெள்ளி, குந்தன், முத்துகள், லைட் வெயிட், ஹெவி வெயிட் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது.
குறிப்பாக ரூ. 200 முதலே உங்களின் பட்ஜெட் செலவில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.