ஹேண்ட் பேக் வாங்கப்போறீங்களா?

அன்றாடத் தேவை என்றாலும், அவசரத் தேவையென்றாலும், அவர்களது கைகள் முதலில் தேடுவது ஹேண்ட் பேக்கைத்தான்.

உறுதியான கைப்பிடி அவசியம். உங்கள் வசதிக்கேற்ற நீளத்தில் கைப்பிடி இருக்கிறதா என பாருங்கள்.

தையல்கள், இணைப்புகளை சோதித்து பாருங்கள்.

உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள்.

வடிவமும், அளவும், அழகும் அவசியம். உங்கள் தேவைக்கேற்ற அளவில், நீங்கள் விரும்பும் அழகில் இருக்கிறதா என கவனியுங்கள்.

உங்களுக்கு போதுமான அளவுக்கு அறை, ஜிப்கள் இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்குங்கள்.

விலை குறைந்ததை வாங்கிவிட்டு, சில மாதங்களிலே அதனை பரணில் துாக்கிப்போடாமல், விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமானதை தேர்ந்தெடுங்கள்.

புதிய மாடல், புதிய பொருளில் தயாரிக்கப்பட்ட பைகளை வாங்கினால், அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.