இன்று உலக பெற்றோர் தினம்
தாய் பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள். தந்தை பத்து வயது வரை தன் தோளிலும், வாழ்நாள் முழுதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர்.
அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி உலகளாவிய பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் போற்றுதலுக்குரியவர்கள்.
வயதான காலத்தில் அவர்களை புறக்கணித்து விடாமல் அரவணைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரைப் பாராட்டி, அவர்களுக்கு அன்பு, பாசம், கவனிப்பு மற்றும் மரியாதை ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதாகும்
நம் பெற்றோர் நமக்களித்த தியாகம், வளர்ப்பு, கவனிப்பு மற்றும் அசாதாரண ஆதரவு ஆகியவற்றிற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மகிழ்விப்பது மிகவும் அவசியம்.