இன்று உலக எமோஜி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ல் உலக 'எமோஜி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்ஜ் என்பவரால் " உலக எமோஜி தினம்" உருவாக்கப்பட்டது.
பொதுவாக நாம் அனைவருக்கும் நேருக்கு நேர் பேசும் போது தான் முகபாவனையை அறிய முடியும்.
அதுபோல இணையத்தில் 'சாட்டிங்' செய்யும் போது உணர்வு, தகவல், தேவை, துன்பம், மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக 'எமோஜி' குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக மொழியை கடந்து டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் வார்த்தைகள் போல மாறிவிட்டது.
எமோஜிகள் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை விட வேகமாக உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர உதவுகின்றன.
மேலும் இவை மொழி தெரியாதவர்களை கூட எளிதாக தொடர்பு கொள்ள உதவும்.
தற்போதைய சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான்.