பாலைவன பூமியில் உலகின் மிகப்பெரிய பூந்தோட்டம்..!
உலகிலேயே மிகப்பெரிய பூந்தோட்டம் என்ற பெருமையை துபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டன்' பெற்றுள்ளது.
பாலைவன நிலத்தில் ஓர் அற்புத விருந்தாக, கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று பூங்கா திறக்கப்பட்டது.
சுமார் 72 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் 4.5 கோடிக்கும் அதிகமான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எமிரேட்ஸ் ஏர்பஸ் ஏ380 என்ற விமானத்தின் வடிவம் பூக்களால் வடிவமைக்கப்பட்டு, 2016ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மலர் விமானம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
புர்ஜ் கலீஃபாவின் அழகான மலர் வடிவமைப்பு 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.பெட்டூனியா மற்றும் மேரிகோல்ட் பூக்களால் புர்ஜ் கலீஃபா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதய வடிவிலான வளைவு பாதையில் நடந்து செல்லும் போது, ஆயிரக்கணக்கான மலர்களின் நறுமணத்தை நீங்கள் உணர முடியும்.
துபாய் மிராக்கிள் கார்டனில் கோடிக்கணக்கான பூக்களால் உருவாக்கப்பட்ட வண்ணமயமான பங்களாக்கள் மற்றும் வீடுகள் ஆங்காங்கே அமைந்துள்ளது.
குடை பாதை அழகாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சியளிக்கிறது. வெயில் நாட்களில் இந்த குடை பாதை பார்வையாளர்களுக்கு நிழலை வழங்குகிறது.
மலர்களால் ஆன பெண் சிலை, ஹில் டாப், மலர் கட்டமைப்புகளுடன் கூடிய தெளிவான லேக் பார்க், டிஸ்னி உருவகங்கள் என கார்டன் முழுவதும் கைவண்ணம் நீள்கிறது.