"மஞ்சுமேல் பாய்ஸ்" படத்தால் டிரெண்டான குணா குகை…
கொடைக்கானலில் உள்ள பிரம்மாண்ட தூண் பாறைகள் உள்ளே ஆழமாக பல அடுக்குகளை கொண்ட குகைகளாக பள்ளத்தில் நீண்டு கொண்டே, இருப்பதுதான் குணா குகை
இதை டெவில்ஸ் கேவ் அதாவது பேய்க்குகை என ஆங்கிலேயரால், அழைக்கப்பட்டது. இங்கு இயற்கை அழகு சற்று மிரட்டலாக இருக்கும்.
குணா பட பிரபலத்திற்கு பின்னர் குணா குகை என்று பரவலாக அழைக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இந்த குகையில் தான் உருவாக்கப்பட்டது.
கொடைக்கானலில் இருந்து இந்த குகை 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை மர்மம் மற்றும் அதிசயங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
1821 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பி.எஸ்.வார்டு என்பவர் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது.
கடந்த 2006ல் இந்த குகைக்குள் சென்ற நண்பர்கள் குழுவில் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
அதை மையமாக வைத்தே பிப்., 22ல் வெளியான,'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாள திரைப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் மட்டுமல்ல, குணா குகையும் தற்போது டிரெண்டாகி ஹவுஸ் புல்லானது. கொடைக்கானல் சென்றால் தவறாமல் பார்க்கவும்.