ஹேர்ஸ்டைலை மாற்றினால் நீங்கள்தான் கியூட் தேவதை
உங்கள் கூந்தல் அலங்காரத்தில் (Hairstyle) சில சிறிய மாற்றங்களை செய்தாலே, நீங்கள் 'கியூட்' தேவதையாக ஜொலிக்கலாம் என்கிறார்கள், ஹேர் ஸ்டைல் நிபுணர்கள்.
உங்கள் கூந்தல் மெல்லியதாக (Thin hair) இருந்தால், 'கர்ட்டன் பேங்க்ஸ்' (Curtain Bangs) சிறந்த தேர்வாகும்.
இது உங்கள் கூந்தலை அடர்த்தியாக (Bouncy) காட்ட உதவும். இதை பராமரிப்பது எளிது என்பதால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது.
முகத்தை சற்று மெலிதாக காட்ட விரும்பினால், 'லாங் லாப் வித் லேயர்ஸ்' (Long Lob with Layers) ஸ்டைலை டிரை செய்யுங்கள்.
இது உங்கள் முகத்திற்கு பொலிவை தருவதோடு, உங்களை முன்பை விட ஸ்லிம்மாகவும், ஸ்டைலாகவும் காட்டும். சினிமா நட்சத்திரங்கள் பலரின் தற்போதைய 'பேவரைட்' ஸ்டைல் இதுதான்.
வட்டமான முகம் கொண்டவர்கள் 'போனிடைல்' போடும்போது, கூந்தல் முழுவதையும் பின்னால் இழுத்துக் கட்டாமல், முன்பக்கத்தில் 'கர்ட்டன் பேங்க்ஸ்' ஸ்டைல் செய்து பாருங்கள்.
இது உங்கள் முகத்தின் வட்ட வடிவத்தை, சற்று நீளமாக காட்டி, ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும். உங்கள் தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்கும்.
இனி கண்ணாடி முன் நிற்கும்போது 'சப்பி' லுக் பற்றி கவலைப்படாமல், இந்த ஹேர் ஸ்டைல் மேஜிக்கை டிரை பண்ணிப் பாருங்க... அப்புறம் நீங்கதான் ஏஞ்சல்!