விசா பெற ஒரு லட்சம் டாலர் கட்டணம் யாருக்கு? அமெரிக்க அரசு விளக்கம்

அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை.

சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும். அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

அதே நேரத்தில் கிரீன் கார்டு பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளலாம்

புதிய உத்தரவு மூலமாக எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். தற்போது இந்த கட்டணம் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

எச்1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை வருடம் வருடம் கட்ட தேவையில்லை. இது புதிதாக அப்ளே செய்து வாங்கும் போது மட்டும் ஒரு முறை செலுத்தினால் போதும்.

ஏற்கனவே 'எச்1பி' விசா வைத்து இருப்பவர்கள் தற்போது வெளிநாட்டில் இருந்தால் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது.

'எச்1பி' விசா வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம். அதற்கு நேற்றைய அறிவிப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும், புதுப்பித்தலுக்கும், தற்போது விசாவைத்திரப்பவர்களுக்கும் கிடையாது.