இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா

2024 க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லி.,யில் தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி மாளிகைகக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவருக்கு இனிப்பு வழங்கி ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 6வது பட்ஜெட்டாகும்.

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 11வது பட்ஜெட்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நான்காவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய 'டேப்' எடுத்து வந்தார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 57 நிமிடங்களில் பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.