முதல் முறையாக கேம்பிங் செல்பவர்களுக்கு இதோ சில டிரிக்ஸ் !
கேம்பிங் செல்லும் போது முதலில் உங்களின் குழுவினரின் எண்ணிக்கை மற்றும் வானிலைக்கு தகுந்தவாறு கூடாரத்தை தேர்வு செய்ய வேண்டும்; வாட்டர் ப்ரூப்பாக இருப்பது அவசியமானது.
தண்ணீர், சமையல் பொருட்களுக்கு கட்டாயமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தங்கும் நாட்களுக்கேற்ப உணவை தயாரிக்க அடுப்பு, சமையல் பாத்திரங்கள் மற்றும் பொருட்களை எடுக்க தவறாதீர்கள்.
நம்பகமான, பேட்டரியில் இயங்கும் விளக்குகள் அல்லது ஹெட்லேம்ப்கள் மிக முக்கியம்.
ரெயின்கோட், உறுதியான செப்பல்கள் மற்றும் வானிலைக்கு தகுந்தாற்போன்று பொருத்தமான உடைகளை பேக் செய்ய வேண்டும்.
பூச்சி விரட்டி, சன்ஸ்கிரீன், தேவையான மருந்துகள், முதலுதவிப்பெட்டி, வரைபடம், திசைகாட்டி (அ) ஜி.பி.எஸ்., சாதனம், குப்பைகளை சேகரிக்க சாதாரண அல்லது ஜி லாக் பைகள், தீ ஸ்டார்டர்கள் அவசியம்.
வனவிலங்குகளுக்கு உணவளிப்பதை கட்டாயமாக தவிர்க்கவும். இல்லாவிட்டால் அதன் இயல்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
உள்ளூர் கேம்ப் ஃப்யர் விதிமுறைகளை பின்பற்றவும். முகாமை விட்டு வெளியேறும் முன் முழுமையாக தீ அணைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்யவும்.
தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டால், வயர்லஸ் போன்கள், தனிப்பட்ட லொக்கேட்டர் கருவிகள் போன்ற அவசரகால தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்லலாம்.