ஹெல்த்தியான கொய்யா சட்னி !

தேவையானப் பொருட்கள்: கொய்யாக்காய் - 1, சின்ன வெங்காயம் - 1 கப், பூண்டு - 10 பல், காய்ந்த மிளகாய் - 4,

மஞ்சள் துாள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு, உளுந்தம் பருப்பு - தேவையான அளவு.

நல்லெண்ணெய் சூடானவுடன், உரித்த வெங்காயம், உளுந்தம் பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாயை வறுக்கவும்.

அவற்றுடன், நறுக்கிய கொய்யாக்காய், புளி, மஞ்சள் துாள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிதமாக வதக்கி, சூடு ஆறியதும் அரைக்கவும். இப்போது, கொய்யாக்காய் சட்னி ரெடி.

இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துக்கு சைடு டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

கொய்யாக்காயை நறுக்கி சிறு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைத்து எடுத்தும் பயன்படுத்தலாம். நாட்டு கொய்யா எனில் அவற்றின் விதைகளை நீக்கிவிடவேண்டும்.

கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதால், பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க கொய்யா உதவுகிறது.

குடல் புண்ணை குணப்படுத்தும் பண்புகள் இதிலுள்ளன. மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. கொய்யா பழம், காய், மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.