தூக்கமின்மையால் வரும் கூந்தல் உதிர்வு பிரச்னை
இன்றைய பரபரப்பான உலகில் பலரும் இரவு நேரங்களிலேயே, பெரும்பாலான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால், நிறைய ஆரோக்கிய குறைபாடுகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
குறிப்பாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி கூந்தல் உதிர்வு என்பது வாடிக்கையான ஒன்று.
ஒரு நாளுக்கு சராசரியாக ஒருவருக்கு 50ல் இருந்து 60 வரை கூந்தல் உதிர்வது இயல்பானது தான். ஆனால் உதிர்ந்த கூந்தலின் அளவே மீண்டும் அந்த வேர்க்கால்களில் வளர்ந்திட வேண்டும்.
ஆனால் இரவு நேரங்களில் நம் தூக்கம் கெடும் பொழுது வரும் கூந்தல் உதிர்வு மிகவும் அதிகமானதாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
செயற்கை விளக்குகளால் உடம்பில் சுரக்கும் இருவித ஹார்மோன்கள் சமநிலையை இழந்து அதன் மூலம் தூக்கம் கெடுகிறது என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த ஹார்மோன்களில் ஒன்று, மெலடோனின்; இன்னொன்று கார்டிசோல். இதில், மெலடோனின் இருளாகியப் பின், நம்மை தூங்க வைக்கவும், கார்டிசோல் எழ வைக்கவும் உதவுகின்றன.
இரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு உடலில் மெலடோனின் குறைவாக சுரந்து கார்டிசோல் அதிகமாக சுரக்கிறது.
எனவே இந்த கார்டிசோல் ஹார்மோன் சமநிலையின்மையால், கூந்தல் உதிர்வு பிரச்னை உண்டாகிறது.
கூடியளவு டார்க் மோடு ஆப்ஷனை போனில் பயன்படுத்தினால் மெலடோனின் சுரப்பது குறைந்து தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது மருத்துவ வல்லுநர்களின் அட்வைஸாகும்.