அனைவருக்கும் இனிய உகாதி வாழ்த்துகள்!!
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வருடப்பிறப்பின் தொடக்கத்தை குறிக்கும் பண்டிகையாக உகாதி அமைகிறது.
உகாதி, யுகாதி என்றும் அழைக்கப்படுகிறது.யுகாதி என்பது யுகம் என்றும் ஆதி என்றால் புதியது என்றும் பொருள்படும்.
இந்திய கணிதவியலாளர் பாஸ்கராச்சார்யா, 12 ஆம் நூற்றாண்டில், உகாதியை புதிய ஆண்டின் முதல் நாளாக உருவாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் குளிர்காலத்திற்குப் பிறகு ஒரு ஆண்டின் வசந்த காலம் தொடங்குவதால் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பிரம்மா உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
உகாதி அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தடவி குளித்து புத்தாடைகளை அணிவர்.
அதைபோல் தங்கள் வீடுகளை மா இலைகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரித்து கொண்டாடுவர்.
மதிய உணவில் புளி, வெல்லம், மாங்காய் துண்டுகள், மற்றும் வேப்ப இலைகளால் செய்யப்பட்ட பச்சடி மிகவும் சிறப்பு.
அதேபோல் இன்றைய தினத்தில் தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்பட்ட இனிப்பு பொப்பட்லு (போளி), புளி சாதம் போன்ற சிறப்பு உணவுகளையும் செய்து உண்பர்.