80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகனான மிக்கி மவுஸின் சாம்ராஜ்யம் உருவான கதை.
நம் தாத்தா பாட்டி போன்ற, அன்றைய 80'ஸ் கிட்ஸ்களின் மனதில் நின்ற ஒரே கனவு நாயகன் மிக்கி மவுஸ் தான்.
இது 1928ல், இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு அங்கீகாரமும் கிடைத்தது.
ஓவியம் கற்றுக் கொண்ட டிஸ்னி முதலில், ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றில் வர்ணனனையாளராக சேர்ந்தார். ஆனால் அதையும் அவரால் தொடர முடியவில்லை.
தான் எடுத்த ஒரு குரும்படம் வாயிலாக, ஆஸ்வோல்ட்' - தி லக்கி ரேப்பிட்' என்ற படைப்பை உருவாக்க அவருக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.
அது பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்று கூறிவிட்டது.
அதன் பிறகு, உலகளவில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கண்டு களிக்கும் வகையில், ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
எதிர்பாராவிதமாக ஒரு நாள் வீட்டிற்குள் நுழைந்த எலி ஒன்று செய்த சேட்டைகளைக் கண்டதும், ரசித்துக் கொண்டே அதனை வரையத் துவங்கினார்.
நன்றாக பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, தன் மனைவி தந்த யோசனையின் பேரில், வரைந்த கதாபாத்திரத்துக்கு 'மிக்கி மவுஸ்' எனப் பெயரிட்டார்.
'தி மிக்கி மவுஸ் கிளப்' என்றத் தொடர் 1959ல் உலக அளவில் சென்றடைந்தது.
நவம்பர் 18-ஆம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடத் துவங்கினர்.
வால்ட் டிஸ்னி நிறுவனம் அமெரிக்காவில் டிஸ்னி லேண்டையும் உருவாக்கியது. அங்கு சென்று பார்க்க வேண்டும், என்பது அக்கால குழந்தைகளின் கனவாக இருந்தது.