கூந்தலை வலுப்படுத்த உதவும் இயற்கை கண்டிஷனர்கள்!
கூந்தல் இழைகளுக்கு தேன் சிறந்த மாய்ஸ்சரைசராக உள்ளது. இரண்டு டீஸ்பூன் தேனுடன் நான்கு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவவும்.
30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி வர, நாளடைவில் கூந்தலில் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பளபளப்பாவதை காணலாம்.
ஸ்ட்ராங்கான கண்டிஷனிங் மற்றும் பளபளப்பு என்றால் முட்டை சிறந்தாக உள்ளது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் என உங்களுக்கு விருப்பமான எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன், முட்டையை முழுதாகவோ அல்லது அதன் வெள்ளைப் பகுதியை மட்டுமோ கலந்து, கூந்தலில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி சிறிதளவு ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும்.
பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கா உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம், கூந்தல் உதிர்வு பிரச்னையை தீர்க்க அதிகளவில் உதவுகிறது. கூந்தலையும் பளபளப்பாக மாற்றுகிறது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்ட்டை தாராளமாக கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் அலசவும்.
உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் முக்கியப் பொருளாக தயிர் உள்ளது. ஆனால், இது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் வறட்சியை தீர்க்கும், கூந்தலை மென்மையாக்கவும் உதவுகிறது.
தயிரில் சிறிதளவு கற்றாழை ஜெல் மற்றும் தேன் சேர்த்து கூந்தலில் நன்றாக தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசவும்.
கூந்தல் ஆரோக்கியமாக, ஈரப்பதமாக இருக்க தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. வெதுவெதுப்பான சூட்டில் சிறிது எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்து, கூந்தலிலும் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.