இந்தியர்கள் அதிகளவில் சிங்கப்பூர் செல்ல என்ன காரணம்?
சமீப காலமாக சிங்கப்பூருக்கு செல்லும் இந்தியர்களின் என்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விசிட் செய்துள்ளனர். இது இந்தோனேசியா, சீனா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.
சிங்கப்பூருக்கு முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் நேரடி விமானங்கள் இருப்பதே, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை என முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமானம் இருப்பது பயணிகளுக்கு சுற்றுலா செல்ல வசதியாக உள்ளது.
சிங்கப்பூரின் விசா கொள்கைகள் இந்தியப் பார்வையாளர்களை எளிதாக கவர்கின்றன.
சிங்கப்பூரில் இருக்கும் சுற்றுலா தலங்களும் இந்தியப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. குடும்பத்தினருடன் செல்ல ஏற்ற இடமாக உள்ளது.
சிங்கப்பூரின் வளமான கலாச்சாரக் காட்சி, பரபரப்பான ஷாப்பிங் இடங்கள் மற்றும் சுவையான உணவு ஆகியவை நகரத்தின் எண்ணற்ற அழகை ஆராய பயணிகளுக்கு தூண்டுதலாக இருக்கின்றன.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்கள் இருக்கும் பகுதிகள், இந்திய பயணிகளுக்கு நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.