இன்று தேசிய கைத்தறி தினம்!

கைத்தறித் துறை என்பது நமது நாட்டின் வளமான பலவகை கலாச்சார பாரம்பரியங்களின் அடையாளமாகத் திகழ்கிறது.

நமது நாட்டின் ஊரகப்பகுதிகளிலும், சிறு நகரங்களிலும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக கைத்தறி உள்ளது.

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அன்று அது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது.

முதலாவது தேசிய கைத்தறி தினம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.

இது உள்நாட்டு தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

மேலும், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறையின் பங்களிப்பை பறைசாற்ற உருவாக்கப்பட்டது.

நமது கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளுடன் அதிகாரம் அளிக்க இது உதவும்.