தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தை அன்பின் முன்பு… உலக தந்தையர் தினம்!
தந்தையின் பொருளாதாரமும், அறிவும், குழந்தையின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் குழந்தையின் வாழ்க்கையில் தாய்க்கு அடுத்து, தந்தைக்கும் முக்கிய இடம் உண்டு.
அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல, தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கிடையே வழி நடத்தி வந்தார். இதுதான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு ஏற்படுத்தியது.
இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
பின் 1966ல், ஜூன் மாதத்தின் 3வது ஞாயிறு, நமது தந்தையர்களுக்கு, சர்வதேச தந்தையர் தினத்தின் வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இத்தினத்தின் நோக்கம். குடும்ப நலனுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பவர் தந்தை.
கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும் தந்தையின் அடையாளமாக விளங்குகின்றன. பொறுப்புள்ள தந்தையரால் வீடும், நாடும் வளர்ச்சி பெறும்.