கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்... ஹென்றி டேவிட் தோரேவின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்

மகிழ்ச்சி என்பது பட்டாம்பூச்சி போன்றது. அதை அதிகமாகத் துரத்தினால், உங்களை விட்டு தப்பிச் செல்லும். கண்டுகொள்ளாவிட்டால் மெதுவாக உங்கள் தோளில் வந்து அமரும்.

உங்கள் கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் செல்லுங்கள். நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை வாழுங்கள்.

மனிதர்கள் வெற்றியடைவதற்காகவே பிறந்தவர்கள், தோல்வியடைவதற்காக அல்ல.

வேலையாக இருந்தால் மட்டும் போதாது, எறும்புகளும் அப்படித்தான். என்ன வேலையாக இருக்கிறோம் என்பதே கேள்வி.

எல்லா துரதிர்ஷ்டங்களும் அதிர்ஷ்டத்திற்கான ஒரு படிக்கல் மட்டுமே.

வெற்றி என்பது பொதுவாக அதைத் தேட முடியாத அளவுக்கு அதிக வேலையாக இருப்பவர்களுக்கே வரும்.

நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எதைக் கவனிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

அன்பை விட, பணத்தை விட, புகழை விட, உண்மையைக் கொடுங்கள்.

கீழ்ப்படியாமையே சுதந்திரத்தின் உண்மையான அடித்தளம். கீழ்ப்படிபவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார்.