எதிரி பல்கி பெருக உதவும் மரபணு... கேன்சருக்கு வழிவகுக்கும் !

சிலருக்கு வாயில் அடிக்கடி புண் ஏற்படும். எந்த புண் என்றாலும் அச்சமடைய அவசியமில்லை. ஆனால், 15 நாட்களுக்கு பின்னும் ஆறாமலும், வலி இன்றியும் இருந்தால், டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

காரணம், வாய் கேன்சராக இருக்க வாய்ப்புள்ளது. 'பயாப்சி' எனப்படும் பாதித்த இடத்தில் சிறிய சதையை எடுத்து பரிசோதனை செய்ய தயங்கக் கூடாது.

பலரும், வாய் புண் தானே என்று கடைசி நேரத்தில் டாக்டரிடம் செல்வர். ஒருவேளை கேன்சராக இருக்கும்பட்சத்தில், சிகிச்சை செய்தாலும் பலனின்றி போகிறது.

நம் மரபணுவில் ஒன்று, தன்னுடைய வேலையை செய்ய மறந்து விட்டால், கேன்சர் வரலாம். சில நேரங்களில் அது தவறாக வேலை செய்யும்.

அதாவது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என ஏதாவது எதிரி உள்ளே வந்தால், அதை அழிக்க வேண்டும் என்பதை மறந்து, அதனுடன் சேர்ந்து இன்னும் பல ஆயிரம் எதிரிகளை உருவாக்கி, பரவத் துவங்கும்.

கேன்சர் என உறுதியானால் ஆரம்ப நிலையில் இருந்தால், மாத்திரை, மருந்து கொடுத்தோ, அறுவை சிகிச்சை செய்தோ முழுமையாக குணம் பெறலாம்.

பல்லில் எற்படும் கேன்சர் மற்ற இடங்களுக்கும் பரவலாம். வழக்கத்திற்கு மாறாக வாயில் ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என மாதம் ஒரு முறை சுய பரிசோதனை செய்வதும் அவசியம்.

சிலருக்கு பலவித வைட்டமின் குறைபாட்டினால் வாயில் புண் வரலாம். அடிக்கடி புண் வந்தால், ரத்தம் தொடர்பான பிரச்னையாகவும் இருக்கலாம். மன அழுத்தம் இருந்தாலும் வரும்.