இன்று சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்
பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.
கவலைப்படுவதால் பிரச்னை தீர்வதில்லை. அறிவின் துணையுடன் வெற்றி காண முயலுங்கள்.
துன்பத்தின் கடுமையை உணர்ந்தவனால் மட்டுமே சுகத்தின் அருமையை உணர முடியும்.
உங்களின் விருப்பம் எதுவானாலும் தர்மத்திற்கு முரண்படாத விதத்தில் இருக்க வேண்டும்.
அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள்.
தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.
நற்செயல்களை செய்பவருக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்பதே வாழ்க்கையின் நியதி.