மாணவர்கள் செய்முறை தேர்வில் சிறக்க டிப்ஸ்!
மாணவர்கள் செய்முறை தேர்வில் உள்ள தியரி பகுதியை நன்கு மனப்படம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் விடைத்தாளில் மாணவர்கள், தங்களுக்கு வந்துள்ள எக்ஸ்பெரிமெண்டின் தியரி பகுதியை முதலில் எழுத வேண்டும். அதன் பின்னரே செய்முறையை செய்ய தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.
முதலில் குறிக்கோள் எழுத வேண்டும். மேலும் அதில் என்ன செய்யப்போகிறார், என்ன கண்டுபிடிக்கப் போகிறார் என்பதைப் பற்றி சுருக்கமாக எழுத வேண்டும்.
அடுத்து எந்தெந்த சாதனங்களை வைத்து எக்ஸ்பெரிமெண்டை செய்யப் போகிறார் என்பதையும் அந்த சாதனங்களின் பெயர்களையும் விரிவாக எழுத வேண்டும்.
இயற்பியல் செய்முறை தேர்வில் சர்க்யூட் வரைபடம் அல்லது பார்முலாக்களை கண்டிப்பாக எழுத வேண்டும். இதற்கு பலமுறை வரைந்து பார்த்தும் எழுதி பார்த்தும் பயிற்சி எடுப்பது அவசியம்.
உயிரியல் மற்றும் வேதியியல் நடைமுறைத் தேர்வில் வரைபடம் கட்டாயம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும்.
வேதியியல் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள சால்ட்-ஐயும், டைட்ரேஷன் செய்முறையில் கிடைக்கும் முடிவையும் அட்டவணையில் குறிக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் செயல்முறை எழுதுதல் (புரொசீஜர்) பகுதிக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வாக இருப்பின் புரோகிராமை எழுத வேண்டும். இதில் நிறுத்தற்குறி, முற்றுப்புள்ளி போன்றவைகளை கவனமாக குறியிட வேண்டும்.