பட்ஜெட்டில் சுற்றுலா மற்றும் ரயில்வே துறைகளுக்கான திட்டங்கள்!
நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன.
உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டம்.
லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.
சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.