நீரிழிவுக்கு தீர்வாகும் டார்க் சாக்லேட்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு பாதிப்பு. இதில் 2 வகைகள் உள்ளநிலையில், இரண்டாவது வகை வித்தியாசமானது.

இந்த வகை நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டால் கண் பார்வை, இதயச் செயல்பாடு ஆகியவை கூட பாதிக்கப்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலை மேற்கொண்ட ஆய்வில், டார்க் சாக்லேட் சாப்பிடுவது நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று தானே சொல்வர்?

ஆனால், இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிகமான பாலும், சர்க்கரையும் சேர்க்கப்பட்ட சாக்லேட் அல்ல. மாறாக இவை இரண்டும் குறைவான அளவில் இருக்கும் டார்க் சாக்லேட்.

அதாவது முழுக்க முழுக்க கோக்கோ பொருட்கள் மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கசப்பாக இருக்கும் என்பதால் மக்கள் குறைவாகவே சாப்பிடுவர்.

ஆனால், இது மிகவும் ஆரோக்கியமானது. இதில் உள்ள ப்ளேவனாய்ட்ஸ் இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெள்ளை சாக்லேட்டுகளைச் சாப்பிட்டால் உடல் எடை கூடுமே தவிர நல்ல பலன்கள் கிடைக்காது.