மாடித்தோட்டத்தில் டிராகன் பழத்தை வளர்க்க இதோ ஈஸி டிரிக்ஸ்
தற்போது பிரபலமாவுள்ள டிராகன் பழத்தை உங்களின், தோட்டம், மாடித்தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம்.
விதை அல்லது சிறு தண்டு என டிராகன் பழ செடியை இரண்டு வகைகளில் வளர்க்கலாம்.
முதிர்ந்த டிராகன் பழச்செடியில் இருந்து 9 இன்ச் நீளத்துக்கு ஒரு துண்டை வெட்டியெடுத்து, கற்றாழை சாறில் தேய்த்து நட வேண்டும்.
அல்லது பழுத்த டிராகன் பழத்தை வாங்கி, அதிலிருந்து பிரித்து விதைகளை எடுத்து, தூவி வளர்க்கலாம்; இது எளிதானதாகும்.
எரு, உரம் கலந்த மண் கலவையில் விதைகளை தூவினால், 20 நாட்களில் முளைக்கத் துவங்கும். தினமும் 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்க வேண்டும்.
2 - 3 மாதங்களில் செடி நன்றாக வளர்ந்து தரையில் படரும்போது, பந்தல் போன்று அமைத்து, தாங்கிப் பிடித்தால், பூ பூக்கும் நேரத்தில் தண்டுகள் உடையாமலிருக்கும்.
செடி நன்றாக வளர போதிய சூரிய ஒளி மற்றும் தண்ணீர் தேவை. எனவே, வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் விடலாம். பழத்தை அறுவடை செய்ய 2 ஆண்டுகளுக்கு மேலாகும்.
அவ்வப்போது ஆரோக்கியமற்ற, இடையூறாக உள்ள கிளைகளை துண்டித்தால், பூ பூக்கும் நேரத்தில் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கக்கூடும்.
இலைகளில் இருந்து சிறிய தளிர்கள் வெளிவரும் போது, அழகிய வெள்ளை பூ பூத்து, அதிலிருந்து டிராகன் பழம் வரக்கூடும்.
பூ சுருங்கும்போது, 20 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகும். இளஞ்சிவப்பு மற்றும் உறுதியான அமைப்பு இருந்தால் மட்டுமே டிராகன் பழத்தை பறிக்க வேண்டும்.