இப்படியும் ஒரு இயற்கை வீடு சாத்தியமே..!
நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து சுவாசிக்கும் காற்று வரை ரசாயனமாக மாறியாதால்இயற்கையான பொருட்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
அத்தகைய இயற்கை விரும்பிகளுக்காக, கொடைக்கானலில் இயற்கை ஆர்வலர் ஒருவர், இயற்கை பொருட்களால் வீடு கட்டுவது சாத்தியம் என நிரூபித்துள்ளார்.
இந்த வீட்டில் வெயில், கடுங்குளிர் போன்ற அனைத்து தட்பவெட்ப நிலைகளிலும் உள்ளே இதமான சூழலே நிலவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர் தயிர், முட்டை, கற்றாழை, கருப்பட்டி, நெல்லி போன்ற இயற்கையாக எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டி உள்ளார்.
கட்டுமான பணியிலிருந்து வண்ணம் பூசுவது வரை எந்த ரசாயன பொருட்களும் இன்றி கட்டமைக்கப்பட்டதாகும்.
இவர் கட்டிய வீட்டிற்கு மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசி இருக்கிறார்.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும், அனைத்து பொருட்களும் மறுசுழற்சிக்கு ஏற்றவையாக தேர்ந்தெடுத்துள்ளார்.
சமீபத்தில் டில்லியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் 150 மில்லியன் டன் கழிவுகள் கட்டுமானப் பணிகளின் போது வெளியாகிறது என்று தெரியவந்துள்ளது.
எனவே இந்த இயற்கை வீடுகள், நீர் மாசுபாட்டை குறைப்பதோடு, ஆரோக்கியமான உடல் நலனையும் பேண உதவிபுரியும்.