வீட்டுக்கடனை வேகமாக அடைக்க கைகொடுக்கும் உத்திகள்!

சொந்த வீடு வாங்க வீட்டுக்கடன் கைகொடுக்கிறது என்றாலும், இது நீண்ட கால கடன் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடன் சுமை அதிகரிக்காமல் இருப்பதற்கான உத்திகளை பின்பற்றுவது அவசியம். அதோடு, வீட்டுக்கடனை வேகமாக திரும்பி செலுத்துவதற்கான வழிகளையும் பின்பற்றுவது நல்லது.

மாதத்தவணையில் பெரும் பகுதி வட்டியாகவே அமைவதால், அசலில் ஒரு பகுதியை செலுத்துவதன் மூலம், வட்டியாக செலுத்தும் தொகையை அதற்கேற்ப குறைக்கலாம். இது, அசல் குறைய வழி செய்யும்.

மொத்தமாக பெரிய தொகை செலுத்த முடியாவிட்டாலும், அவ்வபோது கிடைக்கும் சிறிய தொகையை அசலுக்காக செலுத்தலாம். போனஸ் போன்ற தொகையை இதற்கு பயன்படுத்தலாம்.

சாதகமான வட்டி விகிதம் கொண்ட வங்கிக்கு கடனை மாற்ற முயற்சிக்கலாம்.

ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும் போது அந்த தொகையை அசலின் ஒரு பகுதியாக செலுத்தலாம்.

ஊதிய உயர்வுக்கு ஏற்ப மாதத்தவணையை அதிகரிக்கும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம்.

கடனை முன்கூட்டியே அடைப்பது தொடர்பான சாதக பாதகங்களை கணக்கிடுவதோடு, வரி சேமிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.