ஸ்டைலிஸான பஃப் கை டாப்ஸ்..!

பெண்கள் பேஷனில் தற்போது பிரபலமாகி வருவது பஃப் கை.

பஃப் கை டாப்கள் அணிந்தால் பார்க்க ஸ்லிம்மாகவும், ஷேப்பாகவும் தெரியும்.

பாதி தோள்பட்டையுடன், ஒரு பக்கம் பஃப் கையுடன் கூடிய இந்த டாப் பார்ட்டிகளில் அணிய ஏற்ற ஆடையாக இருக்கும்.

கைகள் தவிர மற்ற பகுதிகள் இறுக்கமாக இருந்தால் பார்ட்டிக்கு பக்காவாக பொருந்தும்.

ஷர்ட் வித் பஃபி ஹாண்ட் வகை டாப்கள் சட்டை மாடலில் கைகள் மட்டும் பஃபியாக இருக்கும்.

இது தினசரி பயன்படுத்தும் ஆடைகள் போன்று கேஷுவலாக இருக்கும்.

பஃப் வகை கைகள் ட்ரெடிஷனல் ஆடைகளுக்கும் கச்சிதமாக பொருந்துகிறது.

பஃப் கை டிசைன் அணிகையில், கைகள் சற்று பெரிதாக இருந்தாலும், அதை மறைத்து அழகாகவே காட்டும்.