இந்தியாவில் மிகப்பெரிய காடுகளை கொண்ட டாப் 10 மாநிலங்கள்
94,689 சதுர கி.மீ., பரப்பளவை உள்ளடக்கிய இந்தியாவின் மிகப்பெரிய காடுகளை மத்தியப் பிரதேசம் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த புவியியல் பரப்பில் 30.7% ஆகும்.
அருணாச்சலப் பிரதேசம் 83,743 சதுர கி.மீ., காடுகளைக் கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் விலங்கினங்களில் சுமார் 20% இங்கிருப்பதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
61,907 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்த காடுகளுடன், மகாராஷ்டிரா, வெப்பமண்டல இலையுதிர் காடுகள், முள் காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் என வன சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் விரிகிறது.
வெப்பமண்டல இலையுதிர் காடுகள் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்புநிலக் காடுகள் உட்பட 61,204 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்த காடுகளுடன் ஒடிசா இயற்கை அனுபவங்களை அள்ளித் தருகிறது.
சத்தீஸ்கர் 59,772 சதுர கி.மீ., பரப்பளவில் வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உட்பட பரந்த காடுகளின் தாயகமாக உள்ளது.
43,382 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியுடன், கர்நாடகாவில் ஐந்து புலிகள் காப்பகங்கள், 30 வனவிலங்கு சரணாலயங்கள், 1 சமூக காப்பகம் மற்றும் 15 பாதுகாப்பு காப்பகங்கள் உள்ளன.
ஆந்திரப் பிரதேசம் 37,258 சதுர கி.மீ., பரப்பளவில் வெப்பமண்டல உலர் மற்றும் ஈர இலையுதிர் காடுகள், அதன் கடற்கரையோரத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளை என கொண்டுள்ளது.
அசாமின் மொத்த பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 26,832 சதுர கிமீ ஆகும், இது மாநிலத்தின் புவியியல் பரப்பளவில் 34.21% ஆகும்.
மொத்தம் 23,605 சதுர கி.மீ., பரப்பளவைக் கொண்ட ஜார்கண்ட் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. ஜாம்ஷெட்பூரின் சரண்டா காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய சால் காடு.
தமிழகத்தின் பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 22,877 சதுர கி.மீ., ஆகும். கிழக்கு தொடர்ச்சி மலையின் ரத்தினமான நீலகிரி மலைத்தொடர் உள்ளது.