சருமப் பராமரிப்பில் நாம் செய்யும் சில தவறுகள்!
முகத்தை கழுவிவிட்டு சாதாரணமாக ஒரு கிரீம், பவுடர், குங்குமத்துடன் கூந்தலை அழகாக வாரிவிட்டுதான் பிறர்முன்பு தோன்றுவர்.
இன்றைய இளசுகளோ வீட்டில் இருந்தால் கூட மாய்ஸ்சரைசர், சிம்பிள் பவுண்டேஷன், காஜல், லிப்ஸ்டிக் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
வெளியே சென்றால் அவ்வளவுதான் மேக்கப் கிட்டையும் தூக்கிக் கொண்டே உலா வருவோரும் உள்ளனர்.
ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை முகத்தை கழுவினாலே போதுமானது.
குறிப்பாக மென்மையாக முகத்தை கழுவ வேண்டும். ஆனால் பலரும் பரபரவென்று தேய்ப்பது தவறானது.
கண்களில் இருக்கும் காஜலை, சிறிய காட்டனை (பஞ்சு) எடுத்து சிறிது மேக்கப் ரிமூவருடன் சேர்த்து துடைத்தெடுக்கலாம்.
முகத்தை கழுவிய சிறிது நேரத்திற்கு பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
இரவில் உறங்கும் முன்பு மேக்கப்பை களைத்து விட்டு உறங்க வேண்டும்.
சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும் போது கூடுதல் பொலிவு கிடைக்கக்கூடும்.