உலகின் சுவாரஸ்யமான 7 பாரம்பரிய தளங்கள்

பெருவிலுள்ள மச்சு பிச்சு மர்மம் மற்றும் கல் வேலைப்பாடுகளின் வினோதமான கலவையாகும்; பார்ப்போரை பிரமிக்க வைக்கும்.

அங்கோர்வாட், கம்போடியா... கம்பீரமான இந்த பரந்த கோவில் வளாகம், உலகின் மிகப்பெரிய மத நினைவுச்சின்னமாகும்.

தாஜ்மஹால், இந்தியா... காதல் சின்னமான இது அழகு மற்றும் உணர்ச்சி கலந்த கலவையாகும்.

இத்தாலியிலுள்ள கொலோசியம், பண்டைய ரோமின் அடையாளமாக இருந்தநிலையில், இன்றும் வரலாற்றின் பெருமையை உணர்த்துகிறது.

பெட்ரா, ஜோர்டான்... ரோஜா நகரம் என அழைக்கப்படும் இதன் முகப்புகள் இளஞ்சிவப்பு மணற்கல் பாறைகளால் செதுக்கப்பட்டுள்ளன.

சீனப் பெருஞ்சுவர்... மலைகள், பாலைவனங்களை கடந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பரந்து விரிந்துள்ள இச்சுவர், அழகிய பிரமிப்பை அளிக்கிறது.

கிரீஸ், ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்... பார்த்தீனான்- மேற்கத்திய நாகரிகத்தின் பிறப்பிடமாக மட்டுமின்றி, பாரம்பரிய கட்டடக்கலை அழகையும் பிரதிபலிக்கிறது.