1-3 வயது குழந்தைகளுக்கு உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது கட்டாயமா?

சின்னஞ்சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை கற்று கொடுக்காமல் விட்டுவிட்டால் வளர்கின்ற வயதில் நொறுக்கு தீனி, ஜங்க் புட்ஸ் மீதே அதிகம் ஈர்ப்பு ஏற்படும்.

எனவே 1-3 வயதிற்குள்ளே, வளரும் குழந்தைக்கு நல்ல உணவுப்பழக்கங்களை உருவாக்க வேண்டும். இதனால் இளம் வயதில் அதிக பருமன், நிரிழிபு பாதிப்புகள் வராமல் பாதுகாக்கலாம்.

முதலில் கை, கால் கழுவிய பிறகே உணவு உட்கொள்ள பழக்க வேண்டும். இதன் மூலம் சுத்தம், சுகாதாரத்தின் அவசியத்தை கற்றுக் கொடுக்கவும்.

உணவினை தொட்டுப்பார்த்து அதன் நிறம், மணம், அளவு, வடிவம் பற்றி விளக்கி, அதன் நன்மைகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.

குழந்தைகளுக்கு சமைக்கும் போது, காரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும். வயது ஏற ஏற காரத்தின் அளவை அதிகப்படுத்தலாம். அதிக காரம், மசாலா, சூடு சில குழந்தைக்கு பிடிக்காது.

குட்டீஸ்க்கு கண்களை கவரும் நிறங்களுடைய காரட், பீட் ரூட் போன்ற காய்கறிகளை அதிகம் கொடுக்கவும்.

கீரைகளையும் நெய்யுடன் சேர்த்து அந்த சுவையையும் பழக்க வேண்டும். சக்தி நிறைந்த தானிய, பருப்பு வகைகளை அதிகம் கொடுக்கவும்.

குழந்தைகளுக்கு நேரம் பார்த்து உணவை அளவுடன் தரவும். பசிக்கும் போது உணவுகளை வழங்கவும். கட்டாயப் படுத்த கூடாது. உண்ணும் அளவு மட்டும் தரவும்.