சாக்லேட் பிரியர்கள் தவறாமல் செல்ல வேண்டிய 5 இடங்கள்..!

இந்தியாவில் தனித்துவமான சாக்லேட் அனுபவத்துக்கு பெயர் பெற்ற இடங்கள் உண்டு. விதவிதமான சாக்லேட்டை விரும்பும் பிரியர்கள் செல்ல வேண்டிய 5 இடங்கள் பற்றி பார்ப்போம்.

இந்தியாவில் சாக்லேட் தயாரிப்புக்கு புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக ஊட்டி சாக்லேட் மியூசியம் திகழ்கிறது. இங்கு டார்க், மில்க், முந்திரி, பாதாம் என பலவிதமான சாக்லேட் வகைகளை சுவைக்கலாம்.

கூர்க்கில், கோகோ பயிர் குறிப்பிடத்தக்க அளவில் பயிரிடப்படுகிறது. பண்ணைகளுக்கு நேரடியாக விசிட் அடித்து, நாவில் எச்சில் ஊற வைக்கும் சில்க் சாக்லேட் தயாரிப்பை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான மூணாறில், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.

புதுச்சேரியில் சுவையான, தரமான சாக்லேட்டுகள் மற்றும் உணவு பண்டங்களை, உள்ளூர் கஃபேக்களில் நீங்கள் காபி மற்றும் வேகவைத்த பொருட்களின் நறுமணத்தை வைத்து அறியலாம்.

ஆந்திராவின் ஊட்டி என்றழைக்கப்படும் அரக்கு வேலி புதுமையான, சுவை மிகுந்த சாக்லேட் வகைகளுக்கு புகழ்பெற்றது.