இந்த சம்மருக்கு காஷ்மீரில் பார்க்க வேண்டிய ஏரிகள் !
காஷ்மீரில் உள்ள ஏரிகளில் மிகவும் பிரபலமானது தால் ஏரி. ஷிகாராவில் சவாரி செய்தவாறே பரந்த மலைகளையும், சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாக, வுலர் ஏரி உள்ளது. பசுமையான மலைகள் மற்றும் புல்வெளிகளுக்கு இடையே அமைதியான இயற்கை சூழலை அளிக்கிறது.
காஷ்மீரின் பசுமையான பள்ளத்தாக்குகளில் செழிப்பான பழத்தோட்டங்கள், கம்பீரமான சினார் மரங்களால் சூழப்பட்ட அழகிய மனஸ்பால் ஏரி, படகு சவாரி மற்றும் அழகிய குளியலுக்கு ஏற்றது.
தால் ஏரிக்கு 'சகோதரி ஏரி' என்று கருதப்படும் நைஜீன் ஏரியில், பரபரப்பான கூட்டத்திலிருந்து விலகி அமைதியாக கரையோரத்தில் உலா வரலாம்.
இமயமலையின் பனி மூடிய சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கங்காபால் ஏரி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களை வெகுவாக ஈர்க்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள தார்சார் ஏரி, ஒரு மறைக்கப்பட்ட சொர்க்கமாகும் பனி மூடிய சிகரங்கள், அழகிய வனப்பகுதிகள் என மெய்சிலிக்க வைக்கிறது.
பூக்களின் ஏரி என அழைக்கப்படும் கட்சர் ஏரி, காஷ்மீரில் இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பில் அமைந்துள்ள உயரமான அல்பைன் ஏரியாகும்.
பழமையான நகரமான உதம்பூருக்கு அருகில் அமைந்துள்ள மன்சார் ஏரி, பசுமையான மற்றும் மலைகளில் அமைக்கப்பட்ட அமைதியான சோலையாகும்.