இன்று உலக செவிலியர் தினம்

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பங்கு எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது.

இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1974 பிப்.,ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கொண்டு வந்த இந்த தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

புள்ளியியல் நிபுணர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போரின்போது செவிலியராகவும் பணியாற்றினார். நவீன நர்சிங் துறையின் நிறுவனராக அவர் கருதப்படுகிறார்.

செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்ததினத்தை (மே 12) இத்தினமாக சர்வதேச செவிலியர் சங்கம் அறிவித்தது.

'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; செவிலியர்களை கவனிப்பது பொருளாதாரத்தை உயர்த்துகிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய காலக்கட்டத்தில் , செவிலியர்களின் தியாகம் போற்றதக்கது.