சுற்றுச்சூழலை காக்கும் மியாவாகி மரம் வளர்ப்பு முறை!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுநர் அகிரா மியாவாகி உருவாக்கிய காடு வளர்ப்பு முறையை தான் மியாவாகி மரம் வளர்ப்பு என்று சொல்லப்படுகிறது.

ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1,500 மியாவாக்கி காடுகளை அகிரா உருவாக்கியுள்ளார்.

ஒரு மரம் முழுமையாக வளர சராசரியாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம்.

ஐந்து ஆண்டுகளில் ஒரு மரத்தின் வளர்ச்சி எப்படியிருக்குமோ அந்த வளர்ச்சியை இரண்டே ஆண்டுகளில் காட்ட முடியும் என்பதுதான் இந்த மியாவாகி முறை.

தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இடைவெளியற்ற அடர்நடவு முறையில் மரங்களை நட்டு வளர்க்கப்படுகிறது.

மேலும் இந்த முறையால் குறைந்த பரப்பளவில் அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முடியும்.

நாட்டு மரங்களான வேப்பமரம், அரச மரம் போன்ற மரங்களை மியாவாகி முறையில் வளர்க்கும்போது, இடம் மிகக் குறைவாக இருந்தால் போதும். சுமார் 120 சதுர அடியிலேயே 10 மரங்களை வளர்க்கலாம்.