டேபிள்களை அலங்கரிக்கும் மைக்ரோகிரீன்.. இது ஆரோக்கிய கார்டனிங்!!
இடமிருந்தால் தான் விவசாயியாக மாற வேண்டும் என்ற அவசியமில்லை. மனமிருந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் டேபிளிலும் 'மைக்ரோகிரீன்' உற்பத்தி செய்யலாம் .
நமது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து சத்துப்பற்றாக்குறையை நீக்கும் அற்புத மருந்து தான் 'மைக்ரோகிரீன்'.வீட்டில் இருக்கும் விதைகளைக் கொண்டே 'மைக்ரோகிரீன்' உருவாக்கலாம்.
தென்னைநாரில் இவற்றை உருவாக்கலாம், மண்ணில்லாமல் 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையிலும் சாகுபடி செய்யலாம். சாதாரண அறை வெப்பநிலையில் வீட்டு டேபிள்களில் வளர்க்கலாம்.
வெந்தயம், அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, சோயா போன்ற புரதச்சத்து தரும் செடிகளையும் 'மைக்ரோகிரீன்' ஆக வீட்டில் வளர்க்கலாம்.
முளைகட்டிய பயிரின் அடுத்த நிலை தான் 'மைக்ரோகிரீன்' தொழில்நுட்பம் என்பதால் முழு தாவரத்தையும் சாப்பிடலாம்.
அரைக்கீரை, தண்டு கீரை, சிவப்பு தண்டு கீரை, சிவப்பு சிறுகீரை, பாலக் கீரை வகைகளை விதைக்கலாம்.
இவற்றை ட்ரேயில் விதைத்த 10வது நாளில் தண்டு வரை வெட்டியெடுக்கலாம். தண்டிலிருந்து மீண்டும் துளிரும் என்பதால் மீண்டும் 3 முதல் 4 முறை அறுவடை செய்யலாம்.