ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன?
ஆங்காங்கே வாங்கக்கூடிய ஒருசில ஆப்பிள்களில், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவை தரம் மற்றும் விலையை குறிப்பிடுவதாக விற்பனையாளர்கள் கூறுவர்.
ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் தான் ஆங்காங்கே விற்கப்படுகின்றன.
ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பலரும், அவை விலை உயர்ந்தவை என நினைப்பர்.
ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். எனவே அடுத்த முறை ஆப்பிள் வாங்கும் போது, அதிலிருக்கும் ஸ்டிக்கரை படிக்கவும்.
ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரை வைத்து பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அறியலாம். சில ஸ்டிக்கர்களில் 4 இலக்க எண்கள் இருக்கும்.
அதாவது அவை 4026 அல்லது 4987 போன்ற எண்களைக் கொண்டுள்ளன. இவை பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை என்பதைக் குறிக்கிறது.
இந்தப் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை.
சில பழங்களில் 5 இலக்க எண்கள் இருக்கும்; 8ல் துவங்கும். இவை மரபணு மாற்றம் செய்யப்பட்டவை; இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களை விட விலை அதிகம்.
சில பழங்களில் 9ல் துவங்கும் 5 இலக்க குறியீடு இருக்கும். இவை இயற்கை முறையில் விளைந்தது; ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என அர்த்தம்; விலையும் அதிகமாகும்.