குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கம்... அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்!
உலகில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது பலரும் அறிந்ததே.
அதேவேளையில், வறட்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, குறைந்த ஊதியம், தொழில்களை மூடுதல் உள்ளிட்ட ஆபத்துகள் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கையுடன் தொடர்புடைய விவசாயம் மட்டுமல்ல போக்குவரத்து, உற்பத்தி என அனைத்து துறைகளையும் பாதிக்கிறது.
இந்நிலையில் 2024ல் அமெரிக்காவின் 'லான்செட்' இதழ் , 16 - 25 வயதினரிடம் ஆய்வு நடத்தியது.
அதில், பருவநிலை மாற்றத்தின் அச்சத்தால், அதீத கவலையாக இருப்பதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது என 52 % பேர் தெரிவித்தனர்.
50 வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை, 50 வயதுக்கு மேற்பட்ட குழந்தை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.